எழுத்தாளர்கள் · ஜெயமோகன் · நாவல் · படைப்பு · புத்தகம் · புனைவு · வாசிப்பு · விமர்சனம்

ஏழாம் உலகம்- ஜெயமோகன்

சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் பிச்சைக்காரர்கள் உருவாக வழி செய்ததாக டாக்டர்கள் மீது புகார் எழுந்தது. பொதுமக்கள் மனதில் கழிவிரக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் ஒரு சில ரூபாய்களைப் பெறுவதே பிச்சைக்காரர்களின் நோக்கம். திடகாத்திரமாக இருப்பதாகத் தோன்றினால் பிச்சை போட எவருக்கும் மனம் வராது. ஒன்றுமே செய்ய இயலாத ஊனம், கண் பார்வை மட்டுமின்றி கண்ணே இல்லாமல் இருத்தல் போன்றவை நம் மனதை குலுங்கச் செய்து நாம் நன்றாக இருக்கிறோமே என்ற நிம்மதிக்காக பிச்சையிட வைக்கிறது. இதனால்… Continue reading ஏழாம் உலகம்- ஜெயமோகன்

Rate this:

அ.முத்துலிங்கம் · எழுத்தாளர்கள் · நாவல் · படைப்பு · புத்தகம்

அ.முத்துலிங்கம் எனும் அதிசயக்காரர்

சிறுவயது நினைவு ஒரு சங்கிலித் தொடர் போன்றது. ஒவ்வொருவருக்கும் தனது பால்ய கால மிச்ச நினைவுகள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அது நிகழ்வுகளின் கோர்வையாக இல்லாவிட்டாலும் வாழ்வில் நிகழும் சம்பவங்களின் இருப்பு அவ்வப்போது எழுந்து நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது. ஆனால் அந்த நினைவுத் தொடர் அறுபட்டுவிடாமல் அதை கோத்துக் கொண்டே செல்வது எல்லோராலும் முடிவதில்லை. பால்ய கால நினைவுகள் ஒரு பழைய கறுப்பு வெள்ளை புகைப்படம் போல எல்லோரது மனதிலும் தொங்கியபடி இருக்கிறது. காலங்கள்… Continue reading அ.முத்துலிங்கம் எனும் அதிசயக்காரர்

Rate this:

எழுத்தாளர்கள் · சினிமா · தமிழ்மகன் · நாவல் · புத்தகம் · விமர்சனம்

ஏவி.எம்.ஸ்டுடியோ- ஏழாவது தளம்

பிரகாசமாக எரியும் விளக்கின் கீழே எப்போதும் இருக்கும் இருளைப் போல மனதை மயக்கும் பிரமாண்டங்களின் உள்ளே விசித்திரங்களும் அபத்தங்களும் நிறைந்திருக்கின்றன. எளிய மனிதனுக்கு வெளிச்சமும் பகட்டும் மட்டுமே தெரிகின்றன. அல்லது அதை மீறிப் பார்க்க அவன் முயற்சிப்பதில்லை. விருப்பம் கொள்வதும் இல்லை.பட்டுச் சேலையின் பளபளப்பின் ஊடே பட்டுப் புழுக்களின் ஓயாத மரண ஓலம் ஒலித்துக் கொண்டிருப்பதை யாதொரு பெண்ணும் அறிந்திருப்பாளா எனத் தெரியவில்லை. தங்க, வைர மினுமினுப்பின் அடியில் சூழ்ந்திருக்கும் மையிருட்டில் இருந்து வறண்ட புன்னகையுடன் வாழ்வின்… Continue reading ஏவி.எம்.ஸ்டுடியோ- ஏழாவது தளம்

Rate this: