இணையம் · தமிழ் · தினமணி · தொழில்நுட்பம் · பயிற்சி · வலைப்பதிவு

தமிழில் இணையத்தளம், வலைப்பதிவு பற்றிய கல்வி கருத்தரங்கு

தமிழ்ப் பயன்பாடு குறித்த தமிழ்க் கணிமை ஆர்வலர் சந்திப்பு, கல்விக் கருத்தரங்கு கோவையில் சனிக்கிழமை (நவ.7) நடைபெறுகிறது. கோவை சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு பொறியியல் கல்லூரியில் இச் சந்திப்பு நடைபெறுகிறது.

“உத்தமம்’ அமைப்பின் செயலர் வா.மு.செ.கவியரசன் தலைமை வகிக்கிறார். தமிழ் விக்கிப்பீடியா கலைக் களஞ்சியம், தமிழ் இணையம், வலைப் பதிவுகள், வலைப்பதிவு திரட்டிகள் பற்றி விளக்கம் அளிக்கப்படுகிறது. மாணவ, மாணவியர் தமிழ்க் கணிமைத் திட்டத்தில் எவ்வாறு பங்கு கொள்ளலாம் என்பது குறித்த கலந்துரையாடல் கூட்டமும் நடைபெறுகிறது.

குமரகுரு பொறியியல் கல்லூரி கருத்தரங்க அறையில் சனிக்கிழமை பகல் 2 மணிக்கு நடைபெறும் இச் சந்திப்புக்கான ஏற்பாடுகளை, கம்ப்யூட்டர் அறிவியல் துறை பேராசிரியர் முத்துக்குமார் செய்து வருகிறார். இதில் வயதுவித்தியாசமின்றி யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். பிற்பகல் 2 மணி முதல் 4 மணிவரை பயிற்சிகள் அளிக்கப்படும். இது குறித்து மேலும் தகவல் பெற 99444-36360 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தினமணி

Advertisements

4 thoughts on “தமிழில் இணையத்தளம், வலைப்பதிவு பற்றிய கல்வி கருத்தரங்கு

கருத்து சொல்க

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s